/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உதயநிதிக்கு செஞ்சியில் தி.மு.க.,வினர் வரவேற்பு
/
உதயநிதிக்கு செஞ்சியில் தி.மு.க.,வினர் வரவேற்பு
ADDED : ஜூலை 13, 2025 05:05 AM

செஞ்சி: செஞ்சியில் துணை முதல்வர் உதயநிதிக்கு தி.மு.க., வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று இரவு 8:15 மணிக்கு செஞ்சி வழியாக சென்றார்.
அவருக்கு செஞ்சி கூட்ரோட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமையில் மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்செல்வன், மாநில தீர்மான குழு உறுப்பினர் சிவா, மாவட்ட தலைவர் சேகர், பேரூராட்சி சேர்மங்கன் செஞ்சி முத்தையா அலி ஆனந்தபுரம் முருகன் ஒன்றிய சேர்மன்கள் அமுதா ரவிக்குமார், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை இளம்வழுதி, விஜயராகவன், பச்சையப்பன், மணிமாறன், செழியன், ராஜாராமன், நகர செயலாளர்கள் கார்த்திக், சம்பத், மாணவரணி பிரசன்னா, மகளிர் அணி திலகவதி, தொண்டரணி பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

