ADDED : ஏப் 10, 2025 04:51 AM

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் தி.மு.க., கிழக்கு ஒன்றியம் சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
அரசூர் கூட்ரோட்டில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய அவைத் தலைவர் கலிவரதன், ஒன்றிய துணை செயலாளர்கள் வீராசாமி, பிரபாவதி தாமோதரன், ஒன்றிய பொருளாளர் மைக்கல் மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர். அரசூர் கிளை செயலாளர் குமார் வரவேற்றார்.
தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன், மணிகண்ணன எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி ராமச்சந்திரன், வடமலை, அஸ்வினி சிவராஜ், ராமையா, கண்ணப்பன், வழக்கறிஞர் பிரிவு கரிகாலன், நிர்வாகிகள் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர்கள் விஸ்வநாதன், ஜெயந்தி சக்திவேல், சுகந்தி ராஜீவ்காந்தி, ராஜிவி பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இருமொழி கொள்கைக்கு ஆதரவாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

