ADDED : மே 10, 2025 12:46 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், மத்திய மாவட்டம் மற்றும் நகர தி.மு.க., சார்பில் 'நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு' சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மந்தக்கரை திடலில் நடந்த கூட்டத்திற்கு, நகர செயலாளர் சக்கரை தலைமை தாங்கினார். அவைத் தலைவர் கற்பகமூர்த்தி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு அணி இணைச் செயலாளர் புஷ்பராஜ், துணைச் செயலாளர்கள் புஷ்பராஜ், தயா இளந்திரையன், தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் மாலா, கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, முருகவேல், தெய்வசிகாமணி, பிரபாகரன், வளவனுார் பேரூராட்சி நகர செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, இளைஞரணி அமைப்பாளர் தினகரன், துணைத் தலைவர் சித்திக் அலி, மாணவரணி ஸ்ரீவினோத், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நகர துணைச் செயலாளர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.