ADDED : ஜூன் 26, 2025 11:37 PM

விக்கிரவாண்டி: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் காசி விஸ்வநாதன், வல்லபராசு ஆகியோர் பேசினர்.
மேற்கு ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி துணைச் சேர்மன் பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாவட்ட கவுன்சிலர் மீனா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, தொழில் நுட்ப அணி சாம்பசிவம், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில் குமார், மகேஸ்வரி, கஸ்துாரி, சிற்றுாராட்சி சங்கத் தலைவர் சங்கர்.
ஊராட்சி தலைவர் கஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், அசோக் குமார், சுதாகர், ராஜசேகர், செல்வராஜ், தன்ராஜ், ராஜமாணிக்கம், சபரி, சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் புஷ்ப ராஜ் நன்றி கூறினார்.