ADDED : ஜன 16, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புத்தில் மாவட்ட தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மகளிரணியினர், வரிசையாக புது அடுப்புகள் வைத்து, மண் பானை வைத்து பொங்கலிட்டனர்.
பொங்கல் வழிபாட்டை தி.மு.க., துணை பொதுச்செயலர் பொன்முடி தொடங்கி வைத்து, மகளிருக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொன்முடி துணைவியார் விசாலாட்சியும் கட்சியினருடன் பொங்கல் வைத்து வழிபட்டார்
தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகர செயலாளர் சக்கரை, மகளிரணி தேன்மொழி, ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ராஜா, வேம்பி ரவி, மும்மூர்த்தி, முருகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்னர்.