/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., மாநில நிர்வாகி ஆலோசனை
/
தி.மு.க., மாநில நிர்வாகி ஆலோசனை
ADDED : நவ 20, 2024 05:09 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் முதல்வர் வருகையையொட்டி, தி.மு.க., அமைப்பு இணைச் செயலாளர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 28 மற்றும் 29ம் தேதி கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 28ம் தேதி திண்டிவனம் ஜே.வி.எஸ்.திருமண மண்டபத்தில் மாலை 4:00 மணியளவில் நடைபெறும் விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஒருங்கிணைந்த கூட்டத்தில் பேசுகிறார்.
இதையொட்டி தி.மு.க., அமைப்பு இணைச் செயலாளர் அன்பகம் கலை, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, வசதிகள் குறித்து, வடக்கு மாவட்ட செயாளர் சேகர், தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, முன்னாள் நகர செயலாளர் கபிலன், கவுன்சிலர் நந்தகுமார், வழக்கறிஞர் அசோகன், மாவட்ட பிரதிநிதி முருகன், மீனவரணி ராஜேஷ் உட்பட பலர் பங்ஙேகற்றனர்.

