ADDED : ஜன 12, 2026 03:20 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' தெருமுனை பிரசாரம் நடந்தது.
கண்டமங்கலம் அடுத்த பள்ளிபுதுப்பட்டு ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் நதியா சுகேந்திரன் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் மோகன்தாஸ், குமணன், ராமமூர்த்தி, சுரேஷ், ஆனந்தராஜ், ஏழுமலை, பிரகாசம் முன்னிலை வகித்தனர்.
மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் வாசன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் சிறப்புரையாற்றினர். தலைமைக் கழக இளம்பேச்சாளர் இன்பகுமரன் பேசினார்.
இதில், இலக்கிய அணி சிவராமன், ஊராட்சி செயலாளர்கள் சுகேந்திரன், சிவபாலன், ரவிச்சந்திரன், சத்தியநாதன், காமராஜ், ஆறுமுகம், சந்திரசேகர், பிரதிநிதிகள் முருகன், சிவசெல்வன், ரகுநாதன், ரவிக்குமார், பரிமளா, விக்ரம் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி துணை தலைவர் பிரசாத் நன்றி கூறினார்.

