/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., தெரு முனை பிரசார கூட்டம்
/
தி.மு.க., தெரு முனை பிரசார கூட்டம்
ADDED : ஜன 12, 2025 04:36 AM

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க., சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தென்பேர்,நேமூர், பிரம்மதேசம் ஆகிய இடங்களில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி தலைமை தாங்கினார்.
ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி ,ஒன்றிய செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் கோபி, எப்னாமேரி கலந்து கொண்டு பேசினர்.
கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், புனித ராமமூர்த்தி, இளைஞர் அணி கில்பர்ட் ராஜ், இலக்கிய அணி கலைச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், அருணாச்சலம், பாரதி சுரேஷ் சத்யா கோபாலகிருஷ்ணன், ராஜேஸ்வரி ராஜி, மாவட்ட பிரதிநிதி வினாயகமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவி தனலட்சுமி ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.