/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
/
தி.மு.க., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 26, 2025 11:47 PM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் வளத்தியில் நடந்தது.
ஒன்றிய அவைத் தலைவர்கள் ஏழுமலை, உதயகுமார், ஆறுமுகம் தலைமை தாங்கினர். ஒன்றிய செயலாளர்கள் நாராயணமூர்த்தி, சாந்தி முன்னிலை வகித்தனர்.
கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேசினார்.
கூட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ, செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய சேர்மன்கள் மேல்மலையனுார் கண்மணி நெடுஞ்செழியன், செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிகுமார், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன், ஒன்றிய, கிளை நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.