/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., வீரவணக்க பொதுக்கூட்டம்
/
தி.மு.க., வீரவணக்க பொதுக்கூட்டம்
ADDED : ஜன 25, 2026 04:24 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் கோலியனுார் கூட்ரோட்டில் இன்று 25ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.
மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை:
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் கோலியனுார் கூட்ரோட்டில் இன்று 25ம் தேதி மாலை 5:00 மணிக்கு மொழிப்போர் தியாகிக ளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. கட்சியின் சட்ட திருத்தக்குழு செயலாளர் கிரிராஜன் எம்.பி., தலைமைக் கழக பேச்சாளர்கள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பேசுகின்றனர்.
கூட்டத்தில், நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும். மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

