/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
/
தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 22, 2025 03:57 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தில் கலைஞர் நுாற்றாண்டு விழாவையொட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், வாசுதேவன், கிளைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மதுரை முத்து முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிளைச் செயலாளர்கள் ஐயப்பன், வேம்பன், அயோத்தி, பரந்தாமன், செல்வராஜ், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் பாபு, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் புண்ணியமூர்த்தி, செல்லபெருமாள்.
ஓட்டுனர் அணி முருகன், பொறியாளர் அணி நமச்சிவாயம், தொழிலாளர் அணி பாரதி, விளையாட்டு மேம்பாட்டு அணி பிரபாகரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட மருத்துவமனை அமைப்பாளர் காவிய வேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.