ADDED : பிப் 11, 2026 04:02 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி தி.மு.க., சார்பில் கிராமங்களில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய கிராமங்களான வெ.அகரம், பஞ்சமாதேவி, கள்ளிப்பட்டு, வடவாம்பலம், பூவரசன்குப்பம், பரசுரெட்டிப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பொதுமக்கள் வீடுகளுக்கே நேரில் சென்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
