/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' அமைச்சரை கண்டித்து தி.மு.க., மகளிரணி போராட்டம் உருவ பொம்மை எரிப்பால் பரபரப்பு

ADDED : மார் 18, 2026 05:05 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க., மகளிரணியினர் முன்னாள் அமைச்சர் சண்முகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து நேற்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், முதல்வரின், உங்கள் கனவு திட்டம் குறித்து நடிகையை தொடர்பு படுத்தி பேசியது சர்ச்சைக்குள்ளானது.
இதனை கண்டித்து, நேற்று மாலை தி.மு.க., மகளிரணி சார்பில், விழுப்புரத்தில் போராட்டம் நடந்தது.
காந்தி சிலை அருகே செல்வி தலைமையில் திரண்ட தி.மு.க., மகளிரணியினர், பெண்கள் குறித்து அவதுாறாக பேசி வரும் முன்னாள் அமைச்சர் சண்முகத்தைக் கண்டித்து கைது செய்யக்கோரி கோஷமிட்டனர்.
அப்போது திடீரென அவரது உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
உடன், விழுப்புரம் டவுன் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.