/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., மகளிரணி கூட்டம்; விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
/
தி.மு.க., மகளிரணி கூட்டம்; விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
தி.மு.க., மகளிரணி கூட்டம்; விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
தி.மு.க., மகளிரணி கூட்டம்; விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
ADDED : பிப் 11, 2025 06:49 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் நாளை நடைபெறும் தி.மு.க., மகளிரணி ஆலோசனை கூட்டத்தில், கனிமொழி எம்.பி., பங்கேற்கிறார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம், நாளை (12ம் தேதி) காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
விழுப்புரம் அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்குகிறார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, தி.மு.க., எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், சமூக வலைதள பொறுப்பாளர் ரியா, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, இணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில், கட்சியின் சார்பு அணிகளின் நிர்வாகிகள், மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.