/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குஷ்பு உருவ பொம்மை எரித்து தி.மு.க, மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
/
குஷ்பு உருவ பொம்மை எரித்து தி.மு.க, மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
குஷ்பு உருவ பொம்மை எரித்து தி.மு.க, மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
குஷ்பு உருவ பொம்மை எரித்து தி.மு.க, மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 14, 2024 05:28 AM
செஞ்சி, : விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடிகை குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க., மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜ., நிர்வாகி நடிகை குஷ்பு, தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் மகளிர் உரிமை தொகை குறித்து விமர்சித்து பேசியதை கண்டித்து செஞ்சி கூட்டு ரோட்டில் தி.மு.க., மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திலகவதி தலைமையில் நடிகை குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.