/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., இளைஞர் அணி கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
/
தி.மு.க., இளைஞர் அணி கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
தி.மு.க., இளைஞர் அணி கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
தி.மு.க., இளைஞர் அணி கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
ADDED : மே 17, 2025 11:37 PM

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம், இன்று 18 ம் தேதி திருக்கோவிலுாரில் நடக்கிறது.
தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் கவுதமசிகாமணி வெளியிட்டுள்ள அறிக்கை;
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி மற்றும் திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி இளைஞரணி பூத் ஏஜென்ட் ஆலோசனை கூட்டம், இன்று 18 ம் தேதி மாலை 3.00 மணிக்கு, திருக்கோவிலுார் செவலை ரோடு, பி.ஜி.எஸ்., திருமண மண்டபத்தில் நடக்கிறது.
மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் கவுதமசிகாமணி தலைமை தாங்குகிறார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், துணை செயலாளர்கள் முருகன், கற்பகம், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்முடி எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், திருக்கோவிலுார் தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்கின்றனர்.
தெற்கு மாவட்ட மற்றும் திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், இளைஞர் அணி அமைப்பாளர்கள், பூத் ஏஜென்ட், தலைமை செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

