ADDED : டிச 08, 2024 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : உடல் நிலை சரியில்லாமல் இறந்தவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
திண்டிவனம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் பொருளாளர் நவநீதன் என்பவரின் தாயார் சுசிலா, 66; உடல்நிலை சரியில்லாமல், செண்டியம்பாக்கம் கிராமத்தில் இறந்துவிட்டார். இவரது கண்கள் திண்டிவனம் ேஹாஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரியின் ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.
இதில் சங்கத்தின் நகர தலைவர் ஏழுமலை, மாவட்ட தலைவர் அன்னைசந்தானம், செயலாளர் சிவக்குமார் நிர்வாகிகள் சித்தார்த்தன், ரவிக்குமார், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.