/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்: பழனிசாமி விளக்கம் பழனிசாமி விளக்கம்
/
வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்: பழனிசாமி விளக்கம் பழனிசாமி விளக்கம்
வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்: பழனிசாமி விளக்கம் பழனிசாமி விளக்கம்
வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்: பழனிசாமி விளக்கம் பழனிசாமி விளக்கம்
ADDED : ஜூலை 11, 2025 05:30 AM
விழுப்புரம்:கோவில் நிதியில் கல்லுாரி தொடங்க வேண்டாம் என, பழனிசாமி பேசியதாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து, விழுப்புரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் விளக்கமளித்தார்.
விழுப்புரத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
அரசு நிதியில்தான் கல்லுாரிகளை கொண்டு வர வேண்டும். அறநிலையத்துறை நிதியில் கட்டினால், தொடர்ந்து கூடுதல் வசதிகளை செய்து தர முடியாது என, நான் கூறியதை, இவர்கள் திரித்து, அதற்கு கண், காது, மூக்கு வைத்து பேசி, கடந்த 2 நாட்களாக விவாதம் நடத்துகின்றனர்.
கல்லுாரிகளை அரசே நேரில் தொடங்கினால் தான் அனைத்து வசதிகளையும் படிப்படியாக எளிதாக செய்ய முடியும். அதற்காகத்தான், அரசு நிதியில் கல்லுாரிகள் வேண்டும் என்றேன். அறநிலைய துறையால் கல்லுாரி தொடங்க வேண்டாம் என கூறவில்லை.
திட்டமிட்டு அவதுாறு பரப்ப வேண்டாம். அ.தி.மு.க., ஆட்சியில், 67 கல்லுாரிகளை திறந்தோம். விழுப்புரத்தில் பிரமாண்ட சட்டக்கல்லுாரி, மகளிர் கலை அறிவியல் கல்லுாரியும் வந்தது. பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த 41 உறுப்பு கல்லுாரிகளை அரசு கல்லுாரிகளாக மாற்றினோம். அதனால்தான் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைகிறது. கூட்டுறவு துறையின் கீழ் இயங்கிய பாலிடெக்னிக் கல்லூரிகளை அரசு கல்லுாரிகளாக மாற்றினோம்.
இந்த வரலாறு தெரியாமல் முதல்வர் பேச வேண்டாம். அ.தி.மு.க., ஆட்சியில் 21 பாலிடெக்னிக், 7 சட்டக்கல்லுாரிகள் 4 இன்ஜி., கல்லுாரிகள், 5 மேலாண்மை கல்லுாரிகள், 5 கால்நடை கல்லுாரிகள், 11 மருத்துவ கல்லுாரிகள் கொண்டு வந்தோம். இதனால் தான் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க., ஒரு கல்லுாரியை கூட கொண்டு வரவில்லை என்றார்.

