/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய மீன் மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்குவதில் இழுபறி: அதிகாரிகளின் மெத்தனத்தால் சாலையில் விற்கும் அவலம்
/
புதிய மீன் மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்குவதில் இழுபறி: அதிகாரிகளின் மெத்தனத்தால் சாலையில் விற்கும் அவலம்
புதிய மீன் மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்குவதில் இழுபறி: அதிகாரிகளின் மெத்தனத்தால் சாலையில் விற்கும் அவலம்
புதிய மீன் மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்குவதில் இழுபறி: அதிகாரிகளின் மெத்தனத்தால் சாலையில் விற்கும் அவலம்
ADDED : பிப் 13, 2024 05:26 AM

விழுப்புரம் நகரில் எம்.ஜி.ரோடு பகுதியில் பல ஆண்டுகளாக மீன் மார்க்கெட் இயங்கியது. இந்த மீன் மார்க்கெட்டில், கடலுார், நாகை மாவட்ட மீன்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டு மீன் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
மார்க்கெட்டில் காலப்போக்கில், வியாபாரிகள் அதிகரித்ததால் இடம் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், மீன் வியாபாரிகளுக்குள் அங்கு மீன் வைத்து விற்பனை செய்வதில் பிரச்னை ஏற்பட்டது.
இந்த சூழலில், கொரோனா காலத்தில் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலுக்கு மீன் மார்கெட் மாற்றப்பட்டது.
மீன் வியாபாரிகள் மீன்களை விற்பனை செய்வதற்கான இடம் குறித்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தப்பட்டதால், விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, அனிச்சம்பாளையத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மீன் மார்கெட் வளாகம் கட்டப்பட்டது.
இந்த வளாகம் சில மாதங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அனிச்சம்பாளையத்தில் திறந்து வைத்தார்.
இந்த வளாகத்தில் 40 பெரிய மீன் வியாபாரிகளும், 30க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளும் விற்பனை செய்யும் அளவிற்கு இடவசதி உள்ளது. மேலும், மீன்களை பதப்படுத்தி வைக்கும் குளிரூட்டப்பட்ட அறை வசதிகளும் உள்ளது.
அது மட்டுமின்றி மீன் கழிவுகள் செல்லும் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மீன் மார்க்கெட்டிற்கான இடம் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டதாக நினைத்த மீன் வியாபாரிகளுக்கு இதுவரை நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கான இடங்களை ஒதுக்கித் தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனால், மீன்களை வியாபாரிகள் புதிய மார்க்கெட்டில் விற்க ஒதுக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லாமல் வாகனங்கள் உள்ளே செல்லும் சாலையின் இருபுறங்களில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனால், மீன்களைக் கொண்டு வரும் கன்டெயர்னர் வாகனங்கள் உள்ளே வந்து நிற்க வழியின்றி சிரமப்படுவதோடு, மீன்களை வாங்க வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த இடமின்றியும் தவிக்கின்றனர்.
இந்த பிரச்னை தொகடர்பாக நகராட்சி அதிகாரிகள் மீன் வியாபாரிகளுக்கு உரிய பதில் அளிக்காமல் மழுப்புகின்றனர்.
இது தெடர்பாக மீன் வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், 'அனிச்சம்பாளையம் புதிய மீன் மார்க்கெட்டில் நாங்கள் 30க்கும் மேற்பட்ட சிறிய வியாபாரிகள் தினந்தோறும் மீன் விற்பனை செய்து வருகிறோம்.
கட்டடம் கட்டியும், எங்களுக்கு முறையாக நகராட்சி நிர்வாகம் இடங்களை ஒதுக்கித் தராததால் சாலையோரத்தில் விற்கிறோம். இதனால் சில தருணங்களில் எங்களுக்குள்ளே சில, சில பிரச்னைகள் ஏற்படுகிறது.
வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், நாங்கள் விற்கும் இடங்களுக்கு அருகே நிறுத்துவதால் கன்டெய்னர் வாகனத்தில் இருந்து வெளியேறும் மீன் கழிவுகள் துர்நாற்றம் வீசுவதோடு, இங்கு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
புதிய மீன் மார்கெட்டில் வியாபாரிகளுக்கான இடத்தை விரைவாக ஒதுக்கித்தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.