/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சில்லறை பாக்கி தகராறு பயணியை தாக்கிய டிரைவர்; விழுப்புரம் பஸ் நிலையத்தில் பரபரப்பு

ADDED : ஜன 15, 2024 06:24 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் டிக்கெட் வாங்கியதும் மீதி சில்லறை கேட்ட தகராறில் பயணியை அரசு பஸ் டிரைவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம், பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 35; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக அரசு பஸ்சில் ஏறினார். விழுப்புரத்திற்கு செல்ல 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். அப்போது, கண்டக்டர் சில்லறை இல்லை என்று தெரிவித்து, பின்னர் வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வந்து இறங்கியபோது, ஆறுமுகம், கண்டக்டரிடம் மீதி சில்லறை கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த பஸ்சின் டிரைவர், ஆறுமுகத்தை தாக்கினார். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து ஊழியர்கள், பிற பயணிகள் விலக்கி விட்டனர்.
இது குறித்து, ஆறுமுகம் விழுப்புரம் பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.