/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரத்தில் கார் மோதல் டிரைவர் பலி: 4 பேர் காயம்
/
மரத்தில் கார் மோதல் டிரைவர் பலி: 4 பேர் காயம்
ADDED : டிச 25, 2024 12:21 AM

மயிலம்:சென்னை ராயபுரத்தை சேர்ந்த தனியார் கேட்டரிங் நிறுவன பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு, ராமநாதபுரத்திற்கு, 'மாருதி ஆம்னி' காரில் புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கன்னிகாபுரம் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியது.
இதில் கார் டிரைவர் அப்துல் ரகீம், 65, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் பயணம் செய்த ராயபுரம் அகமது பாஷா, 29, பழைய வண்ணாரப்பேட்டை குமார், 31, ஷாகிசா, 35, ரபிக், 34, ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் மூவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

