/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதல் டிரைவர் பலி: 18 பேர் படுகாயம்
/
மயிலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதல் டிரைவர் பலி: 18 பேர் படுகாயம்
மயிலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதல் டிரைவர் பலி: 18 பேர் படுகாயம்
மயிலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதல் டிரைவர் பலி: 18 பேர் படுகாயம்
ADDED : ஏப் 14, 2025 06:38 AM

மயிலம்: மயிலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில், டிரைவர் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள வி.சாலை கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 45; இவர் நேற்று முன்தினம் மயிலம் முருகன் கோவில் முத்துப்பல்லக்கு திருவிழாவுக்கு, தனது உறவினர்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த 18 பேரை டிராக்டரில் அழைத்துச் சென்றார்.
சுவாமி தரிசனம் முடிந்து நேற்று காலை சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அதிகாலை 4:15 மணிக்கு, சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் மயிலம் அருகே பாலப்பட்டு பெட்ரோல் பங்க் எதிரே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த ஈச்சர் லாரி டிராக்டர் மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் பாஸ்கர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாஸ்கர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
டிராக்டரில் பயணம் செய்த வி.சாலை கிராமத்தைச் சேர்ந்த நாகமுத்து, 44; புகழ்செல்வி, 36; லட்சுமி, 45; சீதாலட்சுமி,38; ராஜவேணி, 65; புஷ்பராஜ், 22; தேவபிரசாத், 9; சிவசங்கர், 23; சத்யா, 30; உட்பட18 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து மயிலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.