/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிரைவர் முகத்தில் மிளகாய் பொடி துாவி ரூ. 10.40 லட்சம் பறிப்பு
/
டிரைவர் முகத்தில் மிளகாய் பொடி துாவி ரூ. 10.40 லட்சம் பறிப்பு
டிரைவர் முகத்தில் மிளகாய் பொடி துாவி ரூ. 10.40 லட்சம் பறிப்பு
டிரைவர் முகத்தில் மிளகாய் பொடி துாவி ரூ. 10.40 லட்சம் பறிப்பு
ADDED : ஜூலை 24, 2025 03:59 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே முட்டை லோடு ஏற்றி சென்ற லாரி டிரைவர் முகத்தில் மிளகாய் பொடி துாவி ரூ.10.40 லட்சம் வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் வெள்ளக்கல் கிராமத்தை சேர்ந்த சம்பத் மகன் சப்தகிரி,32; லாரி டிரைவர்.
இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, அவர் வேலை செய்யும் மதுரவாயல் ஏ.வி.என்., முட்டை கம்பெனியிலிருந்து, நாமக்கல் சென்று முட்டை லோடு ஏற்றி வருவதற்காக, ரூ.10.40 லட்சம் பணத்துடன், லாரியில் புறப்பட்டார்.
திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில், நெடுஞ்சாலை லாரிகள் நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தில் லாரியை நிறுத்தி துாங்கிவிட்டு, நேற்று அதிகாலை 3:30 மணிக்கு நாமக்கல் நோக்கி புறப்பட்டார்.
அதிகாலை 4:00 மணிக்கு விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு, அழுக்கு பாலம் அருகே இயற்கை உபாதைக்காக லாரியை நிறுத்திவிட்டு இறங்கினார்.
அப்போது, இன்னோவா காரில் வந்த இருவர், சப்தகிரி முகத்தில் மிளகாய் பொடி துாவினார். நிலைகுலைந்த அவரை ஒருவர் இறுக்கமாக பிடித்து கொள்ள, மற்றொருவர் லாரி டிரைவர் சீட்டின் அடியில் வைத்திருந்த ரூ. 10.40 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காரில் திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றனர் .
இதனால் அதிர்ச்சியடைந்த சப்தகிரி, வழிப்பறி குறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.
சம்பவம் குறித்து லாரி டிரைவர் சப்தகிரியிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.