/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பாலத்தில் வாகனங்கள் நிறுத்தம் திண்டிவனத்தில் டிரைவர்கள் அட்டகாசம்
/
மேம்பாலத்தில் வாகனங்கள் நிறுத்தம் திண்டிவனத்தில் டிரைவர்கள் அட்டகாசம்
மேம்பாலத்தில் வாகனங்கள் நிறுத்தம் திண்டிவனத்தில் டிரைவர்கள் அட்டகாசம்
மேம்பாலத்தில் வாகனங்கள் நிறுத்தம் திண்டிவனத்தில் டிரைவர்கள் அட்டகாசம்
ADDED : ஜன 21, 2026 05:51 AM

திண்டிவனம்: திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி பஸ், ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திண்டிவனம் நகரில் நீண்ட காலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், திண்டிவனத்தில், நான்கு மார்க்கங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் நகருக்குள் வராமல், தடையின்றி செல்ல மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்தது.
இதேபோல், மேம்பாலத்தின் மேல்பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடக்கூடாது, கீழ் பகுதியில் பஸ் நிலையத்தில்தான் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட வேண்டும்.
மேலும், மேம்பாலத்தின் மேல்பகுதியில், செஞ்சி மார்க்கமாக செல்லும் பாதை குறுகியதாக உள்ளதால், அந்த இடத்தில் பஸ், ஆட்டோக் களை நிறுத்தி பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்று போலீசார் சார்பில் பல முறை எச்சரித்துள்ளனர்.
ஆனால், மேம்பாலத் தின் மேல்பகுதியில் குறிப்பாக புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலை, செஞ்சி, வேலுார், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தி, பயணிகளை இறக்கி, ஏற்றுவது தொடர்கிறது.
இதேபோல் ஆட்டோக் களையும் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றுகின்றனர். இதனால் மேம்பாலத்தின் மேல்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அவதிக்குள்ளாகின்றனர். எஸ்.பி., நேரடியாக ஆய்வு செய்து போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தும் டி ரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

