/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிப்காட் அமைக்க இடம் டி.ஆர்.ஓ., ஆய்வு
/
சிப்காட் அமைக்க இடம் டி.ஆர்.ஓ., ஆய்வு
ADDED : டிச 31, 2025 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் முட்டத்துார் அருகே ஈ.மண்டகபட்டில் தொழிற்பேட்டை அமைக்க கடந்த செப்டம்பர் 12ம் தேதி அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவன கிளை மேலாளர் முகமதா பேகம், தாசில்தார் ஆகியோர் அரசுக்கு சொந்தமான சுமார் 3.5 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு தாசில்தார் அறிக்கை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து நேற்று மாலை ஈ.மண்டகப்பட்டில் டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாசில்தார் செல்வமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, சர்வேயர் நமச்சிவாயம், வி.ஏ.ஓ., சிவரஞ்சனி உடனிருந்தனர்.

