/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நர்சிங் கல்லுாரியில் டி.ஆர்.ஓ., விசாரணை
/
நர்சிங் கல்லுாரியில் டி.ஆர்.ஓ., விசாரணை
ADDED : நவ 27, 2025 04:59 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் தனியார் நர்சிங் கல்லுாரியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கண்டாச்சிபுரம் - திருக்கோவிலுார் ரோட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நர்சிங் கல்லுாரி இயங்கி வருகிறது.இந்நிலையில் தனியார் நர்சிங் கல்லுாரி அடிப்படை வசதி மற்றும் முக்கிய அனுமதி இன்றி இயங்கி வருவதாக புகார் வந்தது. கலெக்டர் உத்தரவின் பேரில் டி.ஆர்.ஓ ஹரிதாஸ்,டி.ஆர்.ஓ முருகேசன்,சுகாதாரத்துறை கூடுதல் டைரக்டர் லதா,டி.எஸ்.பி மனோகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு , மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனத்தை நடத்திவரும் சரவணனிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அதிகாரிகள், கல் லுாரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்றி கல்லுாரி இயங்குவது தெரியவந்தது.மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது. கல்லுாரி முதலாம் ஆண்டு 53 மாணவிகளும், 2 ஆம் ஆண்டில் 40 மாணவிகள் படித்து வருகின்றனர்.
விசாரணையின் போது கண்டாச்சிபுரம் தாசில்தார் முத்து, இன்ஸ்பெக்டர் மூர்த்தி,எ.ஸ்.ஐ காத்தமுத்து உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

