UPDATED : நவ 11, 2026 04:24 PM
ADDED : நவ 11, 2026 04:20 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக அமர்தலிங்கம் பொறுப்பேற்றார்.
விழுப்புரம் மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வந்த அரிதாஸ், சென்னை சுகாதாரத்துறை துணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, ஈரோடு மாவட்ட ஆவின் நிர்வாக பொது மேலாளராக பணியாற்றிய அமிர்தலிங்கம், விழுப்புரம் டி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தின் 31-வது டி.ஆர்.ஓ.,வாக அமிர்தலிங்கம் நேற்று பொறுப்பேற்றார். விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய்த்துறை அலுவலகத்தில் பொறுப்பேற்ற அவருக்கு, வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள், கலெக்டர் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய டி.ஆர்.ஓ.,வாக பொறுப்பேற்ற அமிர்தலிங்கம், கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மானை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
