/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 19, 2025 02:32 AM
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு, கோட்ட கலால் அலுவலர் பழனி தலைமை தாங்கினார். கண்டாச்சிபுரம் தாசில்தார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மஞ்சுநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில், மாணவர்கள் இளம் வயதில் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கலால் ஆலுவலர் பழனி பேசினார்.
தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் போதை பழக்க வழக்கங்களை ஒழிப்பது குறித்து விவாதித்தனர்.
பள்ளி ஆசிரியர்கள் ரவி, ஜான்சன், குரு உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் செய்திருந்தார்.