/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்கள் சைக்கிள் பேரணி
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்கள் சைக்கிள் பேரணி
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்கள் சைக்கிள் பேரணி
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்கள் சைக்கிள் பேரணி
ADDED : ஜன 24, 2025 06:46 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மற்றும் நாஹர் பப்ளிக் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்கள் சைக்கிள் பேரணி நடந்தது.
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை நாஹர் பப்ளிக் பள்ளியிலிருந்து, போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கியது. விழுப்புரம் எஸ்.பி., சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.
லயன்ஸ் கிளப் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். லயன் சங்க நிர்வாகிகள் கோபிகிருஷ்ணா, கனகாதரன், ஏழுமலை, கோபு, விஜயகுமார், ஏழுமலை, சவுந்தரபாண்டியன், நவீன்குமார், செல்வராஜ், கோபிநாத், சபரிநாதன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் அரசப்பன் உறுதிமொழி வாசித்தார்.
இதனையடுத்து தொடங்கிய சைக்கிள் பேரணி, மாம்பழப்பட்டு சாலை, திருச்சி சாலை வழியாக, கலெக்டர் அலுவலகம் வரை சென்று, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். லயன் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

