ADDED : மே 21, 2025 11:16 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் சூர்யா கல்லுாரி மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே துவங்கிய ஊர்வலத்திற்கு, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சங்கர், துணை முதல்வர் ஜெகன், செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் செஞ்சிலுவை சங்க அலுவலர் பிரபு வரவேற்றார்.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் கடைவீதி வழியாகச் சென்று பஸ் நிலையத்தை அடைந்தது. அங்கு, போதை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களிடம் போதை ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், முத்துராஜ், ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், ஜெ.ஆர்.சி., மாவட்டஒருங்கிணைப்பாளர் பாபு, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சந்திரகுமார், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.