UPDATED : அக் 08, 2026 04:29 PM
ADDED : அக் 08, 2026 04:17 PM
கண்டாச்சிபுரம்: போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கண்டாச்சிபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
சாரண ஆசிரியர் பார்த்தசாரதி வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகர் முருகன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் ஆகிவை குறித்து மாணவர்களிடையே பேசினா்.
இதில் உதவி தலைமை ஆசிரியர் மஞ்சுநாதன், கணினி ஆசிரியர் குரு, ஆசிரியர்கள் விஜயகுமார், வெங்கடேசன், திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி பயிற்றுனர்கள் சுரேஷ், ஜான்சன் ஆகியோர் செய்தனர்.
