/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
/
அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஆக 21, 2025 09:02 PM

விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் போதைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சமுதாய மருத்துவத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் தாரணி தலைமை தாங்கினார். ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் முன்னிலை வகித்தார். சமுதாய மருத்துவ துறைத் தலைவர் பரமேஸ்வரி வரவேற்றார்.
போதை மருத்துவம் மற்றும் மன நோய் பொருட்கள் சட்ட பிரிவு சிறப்பு நீதிபதி பாக்கிய ஜோதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர், போதை மருந்துகள், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.
துறை பேராசிரியர் வைத்தியநாதன், மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
உதவி பேராசிரியை ஜானகி நன்றி கூறினார்.