/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் நிலையத்தில் போதை பொருள்: நள்ளிரவில் போலீசார் சோதனை
/
பஸ் நிலையத்தில் போதை பொருள்: நள்ளிரவில் போலீசார் சோதனை
பஸ் நிலையத்தில் போதை பொருள்: நள்ளிரவில் போலீசார் சோதனை
பஸ் நிலையத்தில் போதை பொருள்: நள்ளிரவில் போலீசார் சோதனை
ADDED : ஜன 12, 2026 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் போதை பொருட்கள் குறித்து, போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யாக சாய் பிரனீத் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் போலீசார் போதை பொருட்களை சோதனை செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது, போதை பொருட்களை கண்டறியும் மோப்ப நாய் பஸ்டர் உதவியோடு, அங்குள்ள பயணிகளின் உடமைகள், கடைகள் மற்றும் பஸ் நிலைய வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதனால், புதிய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.