தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குடிபோதையில் தாக்குதல்; வாலிபர் கைது

குடிபோதையில் தாக்குதல்; வாலிபர் கைது

குடிபோதையில் தாக்குதல்; வாலிபர் கைது


ADDED : ஆக 06, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்; குடிபோதையில் தகராறு செய்து, பொதுமக்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் வி.மருதூர் பெருமாள் நகரை சேர்ந்தவர் திருஞானம் மகன் கணபதி, 21; இவர், நேற்று முன்தினம் மதியம் மதுபோதையில், கே.கே.ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு வந்து, கையில் இரும்பு பைப்புடன் நின்றிருந்தார்.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த விழுப்புரம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த கிருஷ்ணசாமியை, 23; வழிமறித்து, தாக்கியதோடு, அவரது பைக்கையும் உடைத்து சேதப்படுத்தி, வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, மருதுார் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த அனீஷ்,29; என்பவரது வீட்டின் முன்பிருந்த மின் விளக்குகளையும் சேதப்படுத்தி தகராறு செய்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, கணபதியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us