/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மது போதையில் கார் ஓட்டி விபத்து 4 வாலிபர்களுக்கு தர்ம அடி
/
மது போதையில் கார் ஓட்டி விபத்து 4 வாலிபர்களுக்கு தர்ம அடி
மது போதையில் கார் ஓட்டி விபத்து 4 வாலிபர்களுக்கு தர்ம அடி
மது போதையில் கார் ஓட்டி விபத்து 4 வாலிபர்களுக்கு தர்ம அடி
ADDED : செப் 19, 2024 11:11 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபர்களை பொது மக்கள் அடி கொடுத்து, கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த கிரிதர யாதவ், 20; இவரது நண்பர்கள் முகமதுஉசேபா, தருண், பிரஜோவல் ஆகியோர் 'ஹூண்டாய் கிரிஸ்டா' காரில் புதுச்சேரிக்கு வந்தனர்.
அங்கு, மது அருந்திய 4 பேரும் நேற்று முன்தினம் மாலை பெங்களூரு திரும்பினர். காரை கிரிதர யாதவ் ஓட்டினார்.
திண்டிவனம் மேம்பாலம் வழியாக நேரு வீதியில் வந்த போது, சப் இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தனர்.
மதுஅருந்தியிருந்ததால் போலீசில் சிக்கினால் பிரச்னை ஏற்படும் என்பதால், திடீரென காரை வேகமாக பின்நோக்கி எடுத்தார். இதனால் அந்த வழியாக வந்த பைக் ஓட்டிகள் மீது மோதியது.
பதட்டமடைந்த கிரிதர யாதவ் காரை புதுமசூதி வழியாக திருப்பினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரை விரட்டிச் சென்று நிறுத்தினர்.
காரை ஓட்டி வந்தவர்கள் மற்றும் உள்ளே இருந்தவர்களை பொது மக்கள் சரமாரியாக தாக்கி, காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் டவுன் போலீசார், மதுபோதையில் காரை ஓட்டி வந்த கிரிதர யாதவ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.