/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் குடித்து குத்தாட்டம்: லயோலா மாணவர்கள் மீது வழக்கு
/
ரயிலில் குடித்து குத்தாட்டம்: லயோலா மாணவர்கள் மீது வழக்கு
ரயிலில் குடித்து குத்தாட்டம்: லயோலா மாணவர்கள் மீது வழக்கு
ரயிலில் குடித்து குத்தாட்டம்: லயோலா மாணவர்கள் மீது வழக்கு
ADDED : செப் 22, 2024 01:34 AM

திண்டிவனம்:சென்னை எழும்பூரிலிருந்து நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு பயணியர் விரைவு ரயில் புதுச்சேரி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
இந்த ரயிலில், முன்பதிவில்லா பெட்டியில் சென்னை லயோலா கல்லுாரி மாணவர்கள் 11 பேர் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் புகை பிடித்தும், மது அருந்தியும் போதையில் சக பயணியருக்கு இடையூறாக குத்தாட்டம் போட்டபடி வந்தனர்.
இது குறித்து பயணியர் சிலர், சென்னை ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இரவு 8:45 மணிக்கு திண்டிவனம் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., தேசி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி, குத்தாட்டம் போட்ட 16 பேரை ரயிலிலிருந்து இறக்கி, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், புதுச்சேரி சுற்றுலா செல்வது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த மொபைல் போன்கள், புளூ டூத் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்களில் ஆறு பேர் போதையில் இருந்தது தெரிய வந்தது. கல்லுாரி மாணவர்கள் உட்பட 16 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, ஜாமினில் விடுவித்தனர்.