/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வராக தகுதியானவர் துரைமுருகன்: பா.ம.க., ராமதாஸ்
/
துணை முதல்வராக தகுதியானவர் துரைமுருகன்: பா.ம.க., ராமதாஸ்
துணை முதல்வராக தகுதியானவர் துரைமுருகன்: பா.ம.க., ராமதாஸ்
துணை முதல்வராக தகுதியானவர் துரைமுருகன்: பா.ம.க., ராமதாஸ்
ADDED : டிச 25, 2024 04:18 AM
விழுப்புரம்: ''தி.மு.க.,வில் துணை முதல்வராகும் தகுதியானவர் துரைமுருகன் தான்'' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் பா.ம.க., சார்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசினார்.
அப்போது, ''கடந்த 1959ம் ஆண்டில், தி.மு.க., தேர்தலில் போட்டியிட்டது முதல், தற்போது வரை அதிகம் எம்.எல்.ஏ., தேர்வானது, வன்னியர் மக்கள் ஆதரவில் தான்.
சேலத்தில் தி.மு.க., அமைச்சராக, கருணாநிதியுடன் மிக நெருங்கியிருந்த வீரபாண்டியாரை, வன்னியர் என்பதாலும், ஸ்டாலினை மதிக்காததாலும் ஓரங்கட்டினர்.
இப்போது, தி.மு.க., பொதுச்செயலராக உள்ள துரைமுருகன், கருணாநிதிக்கு மிக நெருங்கியவர், அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு முதல்வர், துணை முதல்வராவதற்கு அனுபவமும், அறிவும், தகுதியும் இருக்கிறது.
குறைந்த பட்சம் துணை முதல்வராக ஆக்கியிருக்கலாம். ஆனால், உதயநிதியை துணை முதல்வராக்கிவிட்டனர்'' என்றார்.

