/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஈ. மண்டகப்பட்டில் தொழிற்பேட்டை அரசாணை வெளியீடு
/
ஈ. மண்டகப்பட்டில் தொழிற்பேட்டை அரசாணை வெளியீடு
ADDED : பிப் 04, 2026 05:49 AM
விக்கிரவாண்டி: தொழிற்பேட்டை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி, ஈ.மண்டகப்பட்டில் தொழிற்பேட்டை அமைக்க கடந்த ஜனவரியில், டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாவட்ட நிர்வாக அறிக்கை தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்தும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தலைமைச் செயலக முதன்மை கூடுதல் செயலாளர் அமுதா, கலெக்டர் பரிந்துரையை ஏற்று, ஈ. மண்டகப்பட்டில் தொழிற்பேட்டை அமைக்க 1.41.50 எக்டர் நிலத்தை ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., நடவடிக்கையை மக்கள் பாராட்டினர்.

