
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே இந்திய குடியரசு கட்சி மண்டல செயலாளர் குமார் இல்ல காதணி விழா நடந்தது.
அரசூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், சிறுவர்கள் கிருத்திகா, கிரிதரன் ஆகியோரை வாழ்த்தினார்.
மாநில பொறுப்பாளர்கள் மங்காபிள்ளை, கவுரி சங்கர், தன்ராஜ், மோகன், பாலகிருஷ்ணன், இருதயநாதன், ரமேஷ்பாபு, வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி நிறுவனர் சோழன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், ஒன்றிய சேர்மேன் ஓம் சிவசக்திவேல், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) சந்திரசேகரன், (மேற்கு) விஸ்வநாதன், நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி துணைச் சேர்மன் ஜோதி, ஒன்றிய துணை சேர்மன் கோமதி நிர்மல் ராஜ், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் காவிய வேந்தன் உடனிருந்தனர்.

