நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் தின வழிபாடு நடந்தது.
விழுப்புரத்தில் கிறிஸ்தவ மக்கள் சார்பில், கடந்த 18ம் தேதி புனித வெள்ளியாக கடை பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளான நேற்று ஈஸ்டர் தினம் கடைபிடிக்கப்பட்டது.
அதனையொட்டி, விழுப்புரம் துாய கிறிஸ்து அரசர் ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலி நடந்தது.
நேற்று காலை 8:00 மணிக்கு திருப்பலியும், கூட்டு பிரார்த்தனையும் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.