ADDED : ஆக 31, 2026 10:03 PM
விழுப்புரம்: விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில், தீபாவளி சீட்டு, பரிசுத் திட்டங்கள் மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் இ.எஸ். கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் லட்சுமணன் தலைமை தாங்கினார். விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, சரவணன், ஏட்டுகள் இளையராஜா, பூபதி முன்னிலை வகித்தனர்.
டி.எஸ்.பி., ராமு பேசுகையில், ‘தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை சிறு சேமிப்பு திட்டம் என்ற பெ யரில் சீட்டு கட்டினால், கட்டிய தொகைக்கு இரு மடங்கு லாபம் கிடைக்கும் என சில நிறுவனங்கள் எவ்வித அ னுமதியும், உரிமம் பெ றாமல் கவர்ச்சி விளம்பரங்களை வழங்கி மக்களை ஏமாற்றி வருகிறது.
இதனால், ஏராளமான மக்கள் ஏமாந்து வருகின்றனர். இது குறித்து, பொது மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும், பொது மக்களுக்கும் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுபோன்ற மோசடியில் ஏமாந்த மக்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்கலாம்’ என்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
