தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இந்தாண்டு 'கட் ஆப்' மதிப்பெண் குறையும்: கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேச்சு

இந்தாண்டு 'கட் ஆப்' மதிப்பெண் குறையும்: கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேச்சு

இந்தாண்டு 'கட் ஆப்' மதிப்பெண் குறையும்: கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேச்சு


UPDATED : ஜூன் 14, 2026 11:30 PM

ADDED : ஜூன் 14, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 11:30 PM ADDED : ஜூன் 14, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: 'கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு 2 அல்லது 3 மதிப்பெண் 'கட் ஆப்'பில் குறைய வாய்ப்புள்ளது' என கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசினார்.

விழுப்புரத்தில் 'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பொறியியல் துறையில் நன்றாக படித்து மதிப்பெண் பெற வேண்டும். அரியர் இருக்கக் கூடாது. பாடத்தைத் தாண்டிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறியியல் துறை எப்போதும் எவர்கிரீன் தான்.

நல்லபடியாக படித்து திறமைகளை வளர்த்துக்கொண்டால் அனைவருக்கும் வேலை கிடைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்று சீட் கிடைக்கவில்லை என்றால் பொது கலந்தாய்வில் கலந்து கொள்ளலாாம். இது நிறைய மாணவர்களுக்கு தெரியாது.

கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு 2 அல்லது 3 மதிப்பெண் கட் ஆப்பில் குறைய வாய்ப்புள்ளது. கல்லுாரி முக்கியமா அல்லது பாடம் முக்கியமா எனக் கேட்டால் கல்லுாரி தான் முக்கியம்.

எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு முக்கியத்துவம் வாய்ந்த படிப்பு. கெமிக்கல் பாடப்பிரிவிற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. 'ஏஐ' என்பது ஒரு டூல். ஒவ்வொரு துறையிலும் 'ஏஐ' இருக்குமே தவிர, அது ஒரு தனித்துறை இல்லை. பெட்ரோலியம் இன்ஜினியரிங் பாடப்பிரிவு தேர்வு செய்து படித்தால், நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. இதேபோன்று, டிப்ளமோ படிப்பிற்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. அதிகளவிலான கம்பெனிகள் டிப்ளமோ படித்தவர்களை தேர்வு செய்து வருகின்றனர். டிப்ளமோ படித்து விட்டும், பொறியியல் படிக்கலாம்.

ஒவ்வொரு மாணவருக்கும் ஹாஸ்டல் லைப் முக்கியம். ஹாஸ்டலில் தங்கி படித்தால் மாணவர்கள் முன்னேறுவார்கள்.

இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us