/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பரதன்தாங்கல் ஊராட்சியில் பட்டறிவு பயணம்
/
பரதன்தாங்கல் ஊராட்சியில் பட்டறிவு பயணம்
ADDED : ஜூலை 21, 2025 04:50 AM
செஞ்சி : ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் பரதன் தாங்கல் ஊராட்சியில் பட்டறிவு பயணம் மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில் இருந்து ஒரு நாள் பயணமாக செஞ்சி ஒன்றியத்தில் நிர்மல்புரோஸ்கர் மற்றும் சிறந்த ஊராட்சிக்கான விருது பெற்ற பரதன்தாங்கல் ஊராட்சிக்கு பட்டறிவு பயணமாக வருகை புரிந்திருந்தனர்.
ஈரோடு மாவட்ட ஊராட்சி செயலாளர் தலைமையில் பி.டி.ஓ.க்கள்,துணை பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வந்திருந்தனர்.
அவர்கள், ஊராட்சி நிர்வாகம், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் உமாசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.