/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சித்தேரிக்கரையில் கழிவுநீர் தேக்கம்
/
சித்தேரிக்கரையில் கழிவுநீர் தேக்கம்
ADDED : நவ 01, 2024 11:42 PM

விழுப்புரம்: விழுப்புரம் சித்தேரிக்கரையில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி குளம்போல் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
விழுப்புரம், சித்தேரிக்கரை கிருஷ்ணா நகர் பகுதியில், அதிகளவில் குடியிருப்புகளும், வாகன போக்குவரத்தும் உள்ள பகுதியாகும்.
இந்த பகுதியில் பிரதான சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஆளிறங்கு குழிகள் வழியாக கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வழிந்தோடும் கழிவுநீர் தற்போது அதிகரித்து, சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால், அந்த பகுதி பொது மக்கள் நடந்து செல்வதற்கும், வானகங்கள் செல்வதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.