ADDED : நவ 08, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு பிறவியிலேயே காது கேட்காது, வாய் பேச முடியாது. இவர் கடந்த 4ம் தேதி 3:30 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கீழ்காரணை கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி, 69; என்பவர் வீட்டிற்குள் நுழைந்து, அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தபோது சங்கரபாணி தப்பியோடினார். புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து சக்கரபாணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.