/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நுாதனமாக மதுபாட்டில்கள்கடத்திய முதியவர் கைது
/
நுாதனமாக மதுபாட்டில்கள்கடத்திய முதியவர் கைது
ADDED : ஜூன் 30, 2025 03:18 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நுாதனமாக மதுபாட்டில்கள் கடத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் மேற்கு போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அவ்வழியே கால் தாங்கி, தாங்கி வந்த முதியவர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அவர், சந்தேகப்படும் படியாக பதில் கூறியதால் முதியவரை, போலீசார், மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அவர், இரு கால்களிலும் சுலுக்கு பேண்ட்களை கட்டி கொண்டு, புதுச்சேரி மாநிலம் 90 மில்லி மற்றும் 180 மில்லி கொண்ட சிறிய ரக மதுபாட்டில்களை நுாதனமாக கடத்தியது தெரியவந்தது. இவர், திருச்செந்துார் முருகருக்கு, மாலை அணிந்திருந்ததால், போலீசார் கண்டுபிடிக்க மாட்டர் என நுாதனமாக கடத்தியதை போலீசார் கண்டறிந்தனர். விசாரணையில், அவர், விழுப்புரம் வி.மருதுாரை சேர்ந்த கண்ணபிரான் மகன் முரளி,62; என்பது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விழுப்புரத்தில் நுாதனமாக மதுபாட்டில்கள் கடத்திய போலீசாரிடம் முதியவர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.