ADDED : டிச 30, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந் தவர் சீனிவாசன் மகன் ராமானுஜம் 74. இவர், நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் அரசு பள்ளி எதிரே வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

