தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

 தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

 தேனீக்கள் கொட்டி முதியவர் பலி


ADDED : மார் 02, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவலுார்பேட்டை: தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவலுார்பேட்டை அடுத்த கப்ளாம்பாடியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வெங்கடேசன், 52; இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் உளுந்து பயிர் அறுவடை நடந்தது. இந்நிலையில் மதியம், 1:00 மணிக்கு குளக்கரையில் இருந்த புளியமரத்திலிருந்து மலைத்தேனீக்கள் நிலத்திலிருந்த 5 பேரையும் கொட்டியது.

காயமடைந்தவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அனந்தபுரம், பனமலை பேட்டையை சேர்ந்த சின்னதம்பி மகன் ஏழுமலை, 75; பரிதாபமாக நேற்று காலையில் இறந்தார்.

காயம் அடைந்த கப்ளாம்பாடியை சேர்ந்த தங்கமணி, 80; பவுனம்மாள், 75; உமா, 50; வேல்முருகன், 58; ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us