நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலத்தில் வயிற்று வலியால் அவதி அடைந்த முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மயிலம் கிராமத்தில் வசித்து வந்த சுப்பிரமணி, 60; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கடந்த ஜன. 27ம் தேதியன்று குடித்து, மயங்கி விழுந்தார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.