ADDED : பிப் 29, 2024 06:09 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கரன், 73. இவர், கடந்த 3 ஆண்டுகளாக, நுரையீரலில் நோய் பாதிப்பால் அவதியடைந்து வந்தார். கடந்த 27ம் தேதி, வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
